
ராஜு மகாலிங்கத்தின் புதிய வீட்டிற்கு விசிட் அடித்த ரஜினி
இந்த நிலையில் ராஜு மகாலிங்கம் சென்னையில் ஒரு புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தியுள்ளார். அப்போது ரஜினிக்கும் அவர் அழைப்பு விடுத்த நிலையில் படப்பிடிப்பில் இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத ரஜினி, சில தினங்களுக்கு முன்பு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
இது குறித்த புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜு மகாலிங்கம். ஒரு பதிவும் போட்டுள்ளார். அதில், கண்டிப்பாக ஒருநாள் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று வாக்குறுதி அளித்தவர், தான் சொன்னது போலவே எங்கள் வீட்டிற்கு வருகை தந்தார். அவரது வருகையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நன்றி தலைவா என்று பதிவிட்டுள்ளார் ராஜு மகாலிங்கம்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!