
ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போகிறதா இந்தியன் 2?
இந்த நிலையில் தான் ஜூன் மாதம் இந்தியன் 2 திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் தற்போது ஜூன் மாதம் வெளியாக வாய்ப்பில்லை. ஆகஸ்ட் மாதம் தான் இந்தியன் 2 வெளியாக வாய்ப்பு உள்ளது என்று ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் கால அவகாசம் அதிகம் எடுத்துக் கொள்வதாகவும், அதற்காகவே ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்கு ரிலீஸ் தேதி மாற்றப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!