
ஜானுவை மறக்க வைத்த செந்தாழினி : கவுரி கிஷன் மகிழ்ச்சி
இந்த நிலையில் படத்தில் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் படத்தின் நாயகி கவுரி கிஷன் பேசியதாவது : இந்த படத்தில் நான் நடித்த செந்தாழினி கேரக்டர் என் வயதுக்கு மீறிய கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தொடர்பு கொள்ளும்போது எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. இது ஒரு சவாலான கதாபாத்திரம்தான் என நம்பினேன்.
ஜானு என்ற கதாபாத்திரத்திற்கு பிறகு அதைவிட அழுத்தமான செந்தாழினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். செந்தாழினி என் மனதிற்கு நெருக்கமான கதாபாத்திரம். எனக்கு பிடித்த வேடமும் கூட. சில படங்களில் இரண்டு வேடங்களில் நடித்திருப்போம். ஆனால் எனக்கு இந்த படத்தில் பல வெர்சன்ஸ் இருந்தது. ஒரு கலைஞராக இந்த கதாபாத்திரம் எனக்கு சவாலானதாக இருந்தது. கதை ஓட்டத்தின் போது பெரும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. சமூக வலைதளத்தில் பலரும் இந்த படத்தை பார்த்துவிட்டு, "ஜானுவை மறக்கடித்து விட்டீர்கள்" என பாராட்டினர். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
அடுத்து வெளியாகவிருக்கும் சிம்பு தேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்திருக்கும் "போட்" எனும் படத்தில் நானும் நடித்திருக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் படைப்பு கற்பனையும், காட்சி கற்பனையும்தான் அடியே. அவர் எப்போதும் வித்தியாசமான சிந்தனையாளர். அவருடன் இணைந்து மற்றொரு படைப்பிலும் பணியாற்ற இருக்கிறேன். அது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!