
சுந்தர்.சிக்கு வில்லன் ஆன அனுராக் காஷ்யப்
இதுதவிர "ஒன் 2 ஒன்" என்ற படத்தில் சுந்தர்.சிக்கும் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தை 24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கே.திருஞானம் இயக்கி உள்ளார். திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான "பரமபதம் விளையாட்டு" படத்தை தொடர்ந்து இயக்குனர் திருஞானம் இயக்கும் இரண்டாவது படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. விஜய் வர்மன் மற்றும் நீது சந்திரா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!