
நடிகைகள் சம்பளம் குறித்து பேசிய கியாரா அத்வானி
சமீப காலமாக அதிகமாக சினிமாவில் பேசப்படும் விஷயம் நடிகர்-நடிகைகளின் சம்பள விஷயம் தான். இப்போது இது குறித்து கியாரா அத்வானி தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி, "சம்பளம் விஷயத்தில் ஹீரோக்கள் விட ஹீரோயின்கள் குறைவான சம்பளமே பெறுகிறார்கள். இது குறித்து நீண்ட வருடங்களாக பேசி வந்தாலும் எந்தவித பிரயோஜனமும் இல்லை. நமது திறமையை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிப்பார்கள். ஹீரோயின்கள் எந்தளவு ரசிகர்களை கவர்வார்கள் என்பதை பொறுத்து தான் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால் நடிகைகள் தங்கள் நடிப்பு திறமையை அதிகப்படுத்தி கொள்ள வேண்டும். அதேபோல் நமது திறமைக்கு யார் அதிக மதிப்பு தருகிறார்களோ அவர்களுடன் இணைந்து பணியாற்ற முயற்சி செய்ய வேண்டும். அப்போது சம்பள விஷயத்தை பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இருக்காது". என தனது கருத்துக்களை முன்வைத்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!