
மீண்டும் களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள்
அவதூறாகவும், அசிங்கமாகவும், எல்லை மீறிய சண்டைகளாக அவை இருந்தன. விஜய் தீவிர அரசியலில் இறங்கியதும், முதல்வரான பின்னர் இந்த ரசிகர் சண்டை ஓய்ந்தது. இருந்தாலும் அவ்வப்போது ஏதாவது ஒரு சண்டை தலை தூக்கும், பின்னர் அடங்கிவிடும்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், நடிகர் விஷ்ணு விஷால், ரஜினிகாந்த்தைப் பற்றிப் பேசும் போது "தலைவர்" என்றும், முதல்வர் விஜய்யைப் பற்றிப் பேசும் போது, "விஜய்" என்றும் பேசியதை சர்ச்சையாக்கினர் விஜய் ரசிகர்கள்.
ரஜினி சார் என்ன பேசினாரோ, அதைத்தான் நானும் சொன்னேன். எனக்கு விஜய் சாருடன் எந்த பிரச்சனையும் இல்லை என்று பின்னர் விஷ்ணு விஷால் அதற்கு விளக்கம் கொடுத்தார்.
இருப்பினும் விஷ்ணு விஷால் நடித்து இன்று வெளியாகி உள்ள "கட்டா குஸ்தி 2" படத்திற்கு கடுமையான நெகட்டிவ் விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.
விஜய் ரசிகர்களிடமிருந்து "கருப்பு" படம் தப்பித்ததால்தான் அந்தப் படம் 300 கோடி வசூலைக் கடந்தது. அந்தப் படம் வெளிவந்த சமயத்தில் தேர்தல் முடிவுகள் வந்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்ததது. அதனால், அந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. இப்போது அவர்கள் மீண்டும் சினிமா பக்கம் திரும்பி உள்ளார்கள்.
விஜய்யைப் பற்றி எதிர்மறையாகப் பேசுபவர்களின் படங்களை அவர்கள் குறி வைக்கிறார்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!