
பேபி சக்சஸ் மீட்டில் புஷ்பா-2 வசனத்தை பேசிய அல்லு அர்ஜுன்
இந்த நிலையில் இந்த படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஜய் தேவரகொண்டாவும் நடிகர் அல்லு அர்ஜுனும் கலந்து கொண்டனர். இந்த படத்தின் வெற்றிக்காக படக்குழுவினர் அனைவரையும் வாழ்த்திய அல்லு அர்ஜுன் பேசும்போது, "நான் இங்கே புஷ்பா-2 படத்தைப் பற்றி பேச வரவில்லை. இருந்தாலும் இந்த வெற்றியை பார்க்கும்போது புஷ்பா-2 படத்தில் இடம்பெற்ற ஒரு வசனத்தை இங்கே பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று கூறியவர், “இங்கே எல்லாமே ஒரே கட்டளையால் செய்து முடிக்கப்படும். அது புஷ்பாவின் கட்டளை” என்று கூறினார்.
புஷ்பா 2 படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அந்த படத்தின் வசனத்தையே அல்லு அர்ஜுன் கூறியது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!