
ஷோலே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய போது கமலுக்கு வந்த கோபம்
இதுபற்றி கமல் கூறும்போது, "நான் ஷோலே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். அந்தப் படம் ரிலீஸான போது படத்தை பார்த்துவிட்டு அன்று இரவு என்னால் தூங்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஒரு டெக்னீசியனாக அந்த படத்தை வெறுத்தேன். நான் எவ்வளவு பெரிய இயக்குனர்களுடன் பணி புரிந்திருக்கிறேன் என்று தெரிந்தாலும் அப்போது என்னுடைய ரியாக்ஷன் அதுவாக தான் இருந்தது. ஆனால் அமிதாப் ஜி என்னுடைய பல படங்களை பற்றி நல்ல விஷயங்களை பேசி உள்ளார்” என்று கூறினார்.
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், கமல் உதவி இயக்குனராக பணியாற்றிய ஷோலே திரைப்படமும் கமல், ரஜினி இணைந்து நடித்த ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் திரைப்படமும் ஒரே நாளில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!