
ரிலீஸ் குழப்பத்தால் தெலுங்கில் வரவேற்பு பெறாத மாமன்னன்
இந்த படத்தை "நாயகடு" என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர். சுரேஷ் புரொடக்ஷன் மற்றும் ஏசியன் மல்டிபிளக்ஸ் இணைந்து தெலுங்கு பதிப்பை வெளியிட்டது.
"நாயகடு"வெளியான தேதியில் விஜய் தேவரகொண்டாவின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடித்த "பேபி" படம் வெளியானது. அதோடு சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் "மாவீரடு" என்ற பெயரில் வெளியானது. இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததால் "மாமன்னன்" படத்தை தெலுங்கு ரசிகர்கள் கவனிக்கவில்லை. அதோடு வருகிற 27ம் தேதி படம் ஓடிடியில் வெளியாவதால் அதில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் பெரும்பாலான ரசிகர்கள் முடிவு செய்து விட்டனர். இதுபோன்ற குழப்பத்தால் மாமன்னன் தெலுங்கில் வரவேற்பை பெறவில்லை என்று கூறப்படுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!