
கொலையை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி ரித்திகா சிங்
படத்தில் நடித்திருப்பது பற்றி ரித்திகா சிங் கூறியிருப்பதாவது: தமிழ் சினிமா தொடர்ந்து மனதுக்கு நெருக்கமான நல்ல கதாபாத்திரங்களை எனக்கு அளித்து வருகிறது. "கொலை" படத்தில் எனக்கு புத்திசாலித்தனமான ஒரு புலனாய்வு அதிகாரி கதாபாத்திரம். இந்தக் கதாபாத்திரத்தின் புத்திசாலித்தனத்தை சோதிக்கும் சவாலான சூழ்நிலைகளை அவள் அடிக்கடி எதிர்கொள்வாள்.
கொலையின் மர்மத்தை கண்டுபிடிப்பது அவளுடைய முக்கிய வேலையாக இருக்கும். அதே நேரத்தில், அவள் தனது மூத்த அதிகாரிகளுடன் அலுவல் ரீதியான தொல்லைக்கும் ஆளாகிறாள். இது அவளுடைய நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது. அதையும் அவள் சமாளித்து எப்படி உண்மையை கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் உள்ள திருப்பங்கள் பார்வையாளர்களின் யூகங்களை நிச்சயம் உடைக்கும். என்கிறார் ரித்திகா சிங்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!