
குஷ்பு மகள் திருமண விழாவில் திரைப்பிரபலங்கள்
அவந்திகா தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். கடந்த வாரம் ஆரம்பமான "அட்டாக்கர்" தமிழில் அவரது முதல் படம். அவருக்கும் ஷ்ரவன் சீனிவாசன் என்பவருக்கும் நேற்று கோவாவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடைபெற்றது.
இந்தத் திருமண நிகழ்வில் முன்னணி தமிழ் நடிகர்கள் யாரும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதேசமயம் சீனியர் தெலுங்கு நடிகர்களான சிரஞ்சீவி, நாகார்ஜுனா, வெங்கடேஷ் ஆகியோர் அவரவர் மனைவியருடன் கலந்து கொண்டுள்ளனர்.
ஹிந்தி நடிகர்கள் அனில் கபூர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். தமிழ் சினிமாவிலிருந்து நடிகை த்ரிஷா மட்டுமே கலந்து கொண்டுள்ளார். அதேப்போல் 80களின் நடிகைகளில் லிஸி, சரிதா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.
மிகவும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் மட்டுமே இந்தத் திருமணம் நடைபெறுகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!