
இன்று அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் படத்தின் போட்டோ ஷுட்
இப்படத்தின் போட்டோ ஷுட் இன்று மும்பையில் நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வெறும் போட்டோ ஷுட்டாக மட்டுமில்லாமல் டெஸ்ட் ஷுட்டாகவும் இதை பெரும் பொருட்செலவில் எடுக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோகேஷ் கனகராஜ் தமிழில் கடைசியாக இயக்கிய ரஜினிகாந்த் நடித்த "கூலி" படம் பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை என்கிறார்கள். இருந்தாலும் அல்லு அர்ஜுனிடம் கதை சொல்லி அவரை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.
இந்தப் படம் "இரும்புக் கை மாயாவி" கதை என்றும் சொல்லி வருகிறார்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் போதுதான் என்ன மாதிரியான படம் என்பது தெரிய வரும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!