ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த அகாடமி ஆப் அச்சீவ்மென்ட் விருது
ஜூன் 25, 2026
Advertisement
அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு "அகாடமி ஆப் அச்சீவ்மென்ட்" விருது வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை பெற்ற பிறகு அது குறித்த புகைப்படத்தை தனது பக்கத்தில் அவர் பகிர்ந்து இருக்கிறார். இந்த விருதினை உலக புகழ் பெற்ற இயக்குனர் பீட்டர் ஜாக்சன் அவருக்கு வழங்கினார்.
ரஹ்மான் கூறுகையில், ""இந்த உயரிய விருதை பெற்றதில் பெருமை கொள்கிறேன். எனது நாடு, என் மண்ணின் மக்கள், என்னுடன் பணியாற்றிய படைப்பாளிகள் மற்றும் இவ்வளவு ஆண்டுகள் எனக்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களின் அன்பு இல்லாமல் இந்த பயணம் சாத்தியமாகி இருக்காது"" என்றார்.
ஏற்கனவே இரண்டு ஆஸ்கர் விருதுகள், கோல்டன் குளோப், பாப்டா உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை பெற்றிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது பெற்றுள்ள இந்த அகாடமி விருதுக்கும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தற்போது ஏ.ஆர்.ரஹ்மான், தமிழில் எஸ். ஜே .சூர்யாவின் கில்லர் மற்றும் மணிரத்னம், மாரி செல்வராஜ் இயக்கும் படங்கள் மட்டுமின்றி ஹிந்தியில் தயாராகி வரும் ராமாயணா படத்தின் இரண்டு பாகங்கள் உள்பட பல படங்களுக்கு பிசியாக இசையமைத்து வருகிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!