
ஜூலை 14 முதல் ராணாவின் மாயா பஜார் விற்பனைக்கு
கவுதமி சல்குல்லா என்பவர் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் நடிகர்கள் நவ்தீப், நரேஷ், ஈஷா ரெப்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நகரின் முக்கியமான பகுதியில் உள்ள ஒரு புதிதாக கட்டப்பட்ட அபார்ட்மெண்ட் ஒன்றில் வசிக்கும் குடியிருப்புவாசிகள், திடீரென அரசாங்கம் அந்த அபார்ட்மெண்ட் முறையாக அனுமதியுடன் கட்டப்படவில்லை என கூறி அவற்றை அப்புறப்படுத்த முயற்சிப்பதால் அதிர்ச்சி அடைகின்றனர். இதற்காக அவர்கள் கையில் எடுக்கும் போராட்டம் தான் இந்த வெப் சீரிஸின் முழுக்கதை. வரும் ஜூலை 14-ம் தேதி முதல் ஓடிடி தளத்தில் இது ஒளிபரப்பாக இருக்கிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!