
ஜெயிலருக்கு என்னை அழைக்கவில்லை : கேரளாவில் வருத்தப்பட்ட சிவகார்த்திகேயன்
அப்போது சிவகார்த்திகேயனிடம் நீங்கள் ஜெயிலர் படத்தில் கெஸ்ட் ரோலிங் நடிப்பதாக செய்திகள் வெளியானதே. அது உண்மையா என்று கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், அதில் நடிக்கவில்லை என்றும் ஜெயிலர் படத்தில் நடிப்பதற்காக என்னை கூப்பிடவே இல்லையே என்றும் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார் என்பதாலும் ஜெயிலர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது நடிகர் ரஜினிகாந்ததை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்த புகைப்படம் வெளியானதாலும் அவர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் என்பது போன்று ஒரு செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!