
ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‛காளிதாஸ் 2
சீனாவின் ஷாங்காயில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவின் சிறப்பு திரையிடல்கள் ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. உலகம் முழுவதிலிருந்தும் திரைப்பட இயக்குனர் , தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், விமர்சகர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் பங்கேற்கும் இந்த விழாவில், இந்தியாவிலிருந்து சாதனை அளவில் ஏழு திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் தென்னிந்தியாவிலிருந்து ஒரே ஒரு திரைப்படமாக "காளிதாஸ் 2" இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் பவானிஸ்ரீ உட்பட பலர் நடித்து இருந்தனர். சாம்.சி.எஸ் இயக்கி இருந்தார். ஒரு அபார்ட்மென்ட் சில கொலைகள் என்ற பாணியில் கதை நகர்ந்தது. தியேட்டரில் பெரிய வரவேற்பு பெறாவிட்டாலும், ஷாங்காய் திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடப்பட்டது படக்குழுவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!