
ராஜமவுலி வெளியிட்ட ஆச்சர்ய தகவல்கள்!
இதற்கு ராஜமவுலி அவருக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார். அந்த பதிவில், தோலாவிராயில் மகதீரா படத்தின் படப்பிடிப்புக்கு சென்ற போது பழமையான ஒரு மரத்தை பார்த்தேன். அது சிதைந்து போய் இருந்தது. அப்போது சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை அந்த மரத்தின் மூலம் விவரிக்கும் படியான ஒரு படத்தை எடுக்க நினைத்தேன். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு சென்ற போது மொகஞ்சதாரோவிற்கு செல்ல மிகவும் முயற்சி எடுத்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார் ராஜமவுலி.
அதோடு கடந்த 2018ம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக தான் பாகிஸ்தான் சென்றபோது, அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றி பார்த்தபோது எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டு அது குறித்த சில ஆச்சரிய தகவல்களையும் அவர் பகிர்ந்து இருக்கிறார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!