
அடுத்தடுத்து இரண்டு 100 நாள் படங்கள் தந்த பிரதீப் ரங்கநாதன்
அவரது இயக்கத்தில் 2019ம் ஆண்டில் வெளிவந்த "கோமாளி" படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அப்படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. அதற்குப் பிறகு அவர் இயக்கி, நாயகனாகவும் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "லவ் டுடே" படம் நேற்று 100வது நாளைத் தொட்டது.
இன்றைய ஓடிடி யுகத்தில் ஒரு படம் ஒரு தியேட்டரில், காலை காட்சியாகவாவது 100 நாட்களைத் தொடுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், பிரதீப் ரங்கநாதன் இயக்கிய இரண்டு படங்களுமே 100 நாட்களைத் தொட்டிருக்கிறது. அவரது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!