
ஒரு பில்லியன் வசூல் பெறுமா மைக்கேல் ?
அவரது பயோபிக் படமாக "மைக்கேல்" என்ற படம் கடந்த ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் வெளியானது. சுமார் 200 மில்லியன் யுஎஸ் டாலர் தயாரிப்பில் உருவான இப்படம் தற்போது 960 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 9000 கோடிக்கும் சற்று கூடுதல். இன்னும் 40 மில்லியன் வசூலைப் பெற்றால் ஒரு பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைப் பெற்று சாதனை படைக்கும்.
அமெரிக்காவில் மட்டும் 367 மில்லியன் யுஎஸ் டாலரையும், வெளிநாடுகளில் 592 மில்லியன் யுஎஸ் டாலரையும் இப்படம் வசூலித்துள்ளது. இந்தியாவில் 8 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை இந்தப் படம் பெற்றுள்ளது.
2026ம் ஆண்டில் உலக அளவில் அதிக வசூலைக் குவித்த படங்களில் இப்படம் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. "த சூப்பர் மரியோ கேலக்ஸி மூவி" படம் ஒரு பில்லியுன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்து முதலிடத்தில் உள்ளது. இந்தப் படம் சுமார் 110 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலில் தயாராகி இவ்வளவு வசூலைக் குவித்துள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!