
ஹாலிவுட் படத்தில் நடிக்க விரும்பும் ஜூனியர் என்.டி.ஆர்
அமெரிக்காவில் நடந்த விருது வழங்கும் விழாவில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது ஜூனியர் என்டிஆர் அளித்த பேட்டி: எனக்கு ஹாலிவுட் மார்வெல் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது. அந்த வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறேன். மார்வெல் கதாபாத்திரங்களில் எனக்கு அயன்மேன் மிகவும் பிடிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் மார்வெல் உயர் அதிகாரி விக்டோரியா அலோன்சாவை ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து மார்வெல் படத்தில் அவர் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!