இங்கிலாந்து மன்னரின் சர் பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர்
ஜூன் 06, 2026
Advertisement
பிரபல ஹாலிவுட் நடிகர் இட்ரிஸ் எல்பா. தோர், அவெஞ்சர்ஸ் வரிசைத் திரைப்படங்கள், பாஸ்ட் அண்ட் பியூரியஸ், சூசைட் குவாட், மண்டேலா: லாங் வாக் டு ப்ரீடம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு இங்கிலாந்து அரச குடும்பத்தால் வழங்கப்படும் மிக உயர்ந்த பட்டமான "சர்" பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்குப் பிரிட்டிஷ் மன்னர் குடும்பத்தால் "சர்" பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற விழாவில், மன்னர் சார்லஸ் இந்தப் பட்டத்தை இட்ரிஸ் எல்பாவுக்கு வழங்கி கவுரவித்தார். கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காகவும் அவரது சமூக நலப் பணிகளுக்காகவும் இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
விருதைப் பெற்றது குறித்து இட்ரிஸ் எல்பா கூறும்போது, “இந்த கவுரவத்தை முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அரசர் சார்லஸ் கைகளில் இருந்து இந்த விருதைப் பெற்றது என் வாழ்நாளின் மிக நெகிழ்ச்சியான தருணம். எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும், எனது கலைப் பயணத்தை அங்கீகரித்த பிரிட்டிஷ் ராஜ குடும்பத்துக்கும் மனமார்ந்த நன்றி”என்று தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!