
எம்.ஜி.ஆர் பிறந்தநாளில் மீண்டும் வெளியாகும் ‛சிரித்து வாழ வேண்டும்
இப்படத்தின் பாடல்களை வாலியும், புலமைப் பித்தனும் எழுத மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். "உலகம் என்னும்... என்று தொடங்கும் பாடலை புலமைப்பித்தன் எழுத ஷேக் சலாமத், டி.எம்.சவுந்தரராஜன் பாடியிருந்தார்கள். "எண்ணத்தில் நலமிருந்தால்.. மற்றும் "ஒன்றே சொல்வான் நன்றே செய்வான், பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ என்ற பாடல்களும் இடம்பெற்ற படம். தற்போது இந்த படம் நவீன தொழில் நுட்பத்தில் டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வெர்சன் எம்ஜிஆரின் பிறந்த தினமான ஜனவரி மாதம் 17ம் தேதியன்று வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!