
கனெக்ட் படத்திற்காக மீடியாவுடன் கனெக்ட் ஆன நயன்தாரா
பொதுவாக நயன்தாரா அவர் நடிக்கும் படங்களின் எந்த விதமான புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வர மாட்டார். எவ்வளவு பெரிய ஹீரோ ஜோடியாக நடித்தாலும் அப்படங்களுக்காக ஒப்பந்தம் போடும் போதே எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டேன் என குறிப்பிட்டுவிடுவார் என்று திரையுலகத்தில் சொல்வார்கள்.
இந்நிலையில் "கனெக்ட்" படத்தின் சிறப்புக் காட்சிகளை நேற்று சென்னையில் உள்ள தியேட்டர் ஒன்றில் இரண்டு காட்சிகளாக நடத்தினார்கள். முதல் காட்சி பத்திரிகையாளர்களுக்காகவும், இரண்டாவது காட்சி படக் குழுவினர், சினிமா பிரபலங்களுக்காகவும் நடத்தினார்கள். அவற்றில் நயன்தாரா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அது மட்டுமல்ல "கனெக்ட்" படத்திற்காக தமிழ், தெலுங்கில் வீடியோ பேட்டிகளையும் கொடுத்திருக்கிறார். தமிழ் பேட்டியை பிரபல தொகுப்பாளினி டிடி--யும், தெலுங்கு பேட்டியை சுமா கனகல்லா--வும் எடுத்திருக்கிறார்கள். பேட்டிகளின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!