
வானத்தில் பறந்தபடி ரசிகர்களுக்கு நன்றி சொன்ன டாம் குரூஸ்
இந்நிலையில், டாப் கன் மேவ்ரிக் படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் டாம் குரூஸ். அதுவும் ஹெலிகாப்டரில் இருந்து குதித்து அவர் நன்றி கூறியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாரசூட் உதவியுடன் ஹெலிகாப்படரில் இருந்து குதிக்கும் முன் அவர் அதன் விழிம்பில் அமர்ந்து கொண்டு "அனைவருக்கும் வணக்கம், நாங்க தென்னாப்பிரிக்காவைக் கடந்துவிட்டோம். மிஷன்: இம்பாசிபிள் - டெட் ரெக்கனிங் படங்களின் இரண்டு பாகங்களை ஷூட் செய்ய காத்திருக்கிறோம். டாப்கன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி சொல்லாமல் இந்த ஆண்டு முடிவடைவதை நான் விரும்பவில்லை, டாப் கன்: மேவரிக் படத்தை ஆதரித்த உங்கள் அனைவருக்கும் நன்றி" என்று கூறியபடியே கீழே குதித்தார்.
இந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!