
வாத்தி - தான் எழுதிய பாடல் பற்றியும் மவுனம் காக்கும் தனுஷ்
அதற்குப் பிறகு "வாத்தி" படத்தை அவர் கண்டு கொள்ளவே இல்லை. அதற்கடுத்து வெளியான "திருச்சிற்றம்பலம், நானே வருவேன்" ஆகிய படங்களைப் பற்றியும், அவர் தற்போது நடித்து வரும் "கேப்டன் மில்லர்" படத்தைப் பற்றி மட்டுமே பதிவிட்டு வருகிறார். சில தினங்களுக்கு முன்பு தீபாவளியை முன்னிட்டு கூட "வாத்தி" படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார்கள். அதையும் தனுஷ் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ்குமார், “வாத்தி" படத்தின் முதல் சிங்கிள் விரைவில்…பாடலை எழுதியது பொயட்டு தனுஷ்…ஒரு காதல் பாடல்” என முதல் சிங்கிள் வெளியீடு பற்றி நேற்று ஒரு அப்டேட் கொடுத்திருந்தார். தான் எழுதிய இந்தப் பாடல் பற்றி கூட தனுஷ் எந்த ஒரு பதிவையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை.
இதனிடையே, டிசம்பர் 2ம் தேதி வெளியாவதாக இருந்த இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போவதாக தகவல் பரவியது. திட்டமிட்டபடி படம் வெளியாகும் என்று படத்தின் பிஆர்ஓ தெரிவித்துள்ளார். இருப்பினும் "வாத்தி" படத்தை தனுஷ் தவிர்ப்பது ஏன் என அவரது ரசிகர்களும் ஆச்சரியத்துடன் உள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!