இசை ஆல்பத்தில் அருண்ராஜா காமராஜ்
ஜூன் 20, 2026
Advertisement
பாடலாசிரியர், பாடகராக, நடிகராக இருந்து இயக்குனர் ஆனவர் அருண்ராஜா காமராஜ். "கனா" படத்தின் வெற்றி மூலம் இயக்குனராக மாறினார். தொடர்ந்து "நெஞ்சுக்கு நீதி" என்ற படத்தை இயக்கினார். "லேபிள்" என்ற வெப் தொடரை இயக்கினார். தற்போது "வஞ்சம் தீர் என்ற இசை ஆல்பத்தில் பாடி, நடித்துள்ளார்.
புஷ்பநாதன் புரடக்சன்ஸ் மற்றும் அக்ஷயா பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்த ஆல்பத்தை புஷ்பநாதன் இயக்கியுள்ளார். டோனி பிரிட்டோ இசையமைத்துள்ளார்.
ஆல்பம் குறித்து இயக்குநர் கூறும்போது “எனது வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்கள், போராட்டங்களிலிருந்து பெற்ற புரிதல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆல்பத்தை உருவாக்கி உள்ளேன். மனித மனத்தில் ஒளிந்திருக்கும் கோபம், ஏமாற்றம் மற்றும் பழிவாங்கும் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உருவாகியுள்ளது.
ஒவ்வொருவரின் மனதிற்குள்ளிருக்கும் சாத்தான் வேதம் சொன்னால் என்னவாக இருக்குமென்ற சிந்தனையை மையக் கருவாக உருவாகியுள்ள இந்த பாடல், கோபத்தையும், வஞ்சத்தையும் நேர்மறை சக்தியாக மாற்றி வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற உன்னத கருத்தை பொட்டில் அடித்தாற் போல் பேசுகிறது. “வாழ்ந்து காட்டி வஞ்சம் தீர்” என்ற மையக் கருத்து, பாடலின் ஒவ்வொரு காட்சியிலும், வரிகளிலும் வலிமையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது” என்றார். இந்த ஆல்பம் யூ டியூப்பில் வெளியாகி உள்ளது.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!