
கேஜிஎப்-1 சாதனையை முறியடித்து கேஜிஎப் 2வை நெருங்கும் காந்தாரா
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த நயன்தாரா திரைப்படம் கேஜிஎப் ஏற்படுத்தியது போன்று தென்னிந்திய திரையுலகிலும் பாலிவுட்டிலும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேஜிஎப் உருவாக்கி வைத்துள்ள சாதனைகளை இன்னொரு கன்னட திரைப்படம் முறியடிப்பதற்கு நீண்ட நாள் ஆகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது காந்தாரா திரைப்படம் கேஜிஎப் படத்தின் சில சாதனைகளை முறியடிக்க துவங்கியுள்ளது.
அந்தவகையில் இதற்கு முன்னதாக கர்நாடகாவில் வெளியான கேஜிஎப் படத்தின் முதல் பாகத்திற்கு 72 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. தற்போது இதுவரை காந்தாரா திரைப்படத்திற்கு அதைவிட மூன்று லட்சம் டிக்கெட்டுகள் அதிகமாக 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன என்று விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்ல கேஜிஎப் 2 திரைப்படத்திற்கு கர்நாடகாவில் மட்டும் 77 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது தான் மிகப்பெரிய சாதனையாக இருந்து வருகிறது. இன்னும் இரண்டு லட்சம் டிக்கெட்டுகளை தாண்டினால் காந்தாரா திரைப்படம் அந்த சாதனையையும் முறியடிக்கும் அளவிற்கு கிட்டத்தட்ட நெருங்கி வந்துள்ளது. இன்னும் சில நாட்கள் சென்றபிறகு தான் காந்தாரா இன்னும் என்னென்ன சாதனைகளை செய்திருக்கிறது என்பது முழுதாக தெரியவரும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!