கின்னஸ் சாதனை : பாடகர் வேல்முருகன் மகளுக்கு முதல்வர் பாராட்டு
Advertisement
Advertisement
கின்னஸ் சாதனை : பாடகர் வேல்முருகன் மகளுக்கு முதல்வர் பாராட்டு
ஏப் 13, 2022
அ நிறம் | அளவு
Advertisement
பிரபல கிராமிய பாடகர் வேல்முருகன். ஏராளமான சினிமா பாடல்களையும் பாடி உள்ளார். தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். இவரது மகள் ரக்ஷனா கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஒரு நிமிடத்திற்குள் 51 பல்கலைகழகத்தின் சின்னங்களை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். அதாவது பல்கலை கழங்களின் சின்னத்தை காண்பித்தால் அது எந்த பல்கலைகழகத்தின் சின்னம் என்பதை சொல்லிவிடுவார். இந்த சாதனை சான்றிதழுடன் வேல்முருகன் தன் குடும்பத்தினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். முதல்வர் ரக்ஷனாவையும், வேல் முருகன் குடும்பத்தினரையும் வாழ்த்தினார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!