
ராஷி கண்ணாவுக்கு நிறைவேறிய சிறு வயது ஆசை
கடந்த சில தினங்களாக மாஸ்கோ புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிக்க வைத்து வருகிறார் ராஷி கண்ணா. “குழந்தைப் பருவ கனவு நனவாகும் தருணம்,” என ஐஸில் விளையாடும் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். மாஸ்கோவில் தற்போது மைனஸ் டிகிரியில் தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது. கடந்த மாதம் - 13 வரையும் குளிர் நிலவியுள்ளது.
தமிழில் சூர்யா நடித்த "24" படத்தை இயக்கிய விக்ரம் குமார், தெலுங்கில் இயக்கி வரும் படம் "தேங்க் யூ". நாகசைதன்யா, ராஷிகண்ணா மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது. பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!