
ஆர்ஆர்ஆர் ரிலீஸ் அறிவிப்பே வந்தாச்சி : வலிமை எப்போது ?
ஜனவரி 13ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த "வலிமை" படம் ஒமிக்ரான் தொற்று பரவலால் தள்ளி வைக்கப்பட்டது. இன்று முதல் மாநிலத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டுவிட்டன.
தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை அனுமதி என்பது பிப்ரவரி 15 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு 100 சதவீத இருக்கை அனுமதி கிடைக்கவும் வாய்ப்புள்ளது. அதனால், பல படங்களின் வெளியீடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் "வலிமை" படத்தின் வெளியீடு பற்றி இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வரலாம். இருந்தாலும் பிப்ரவரி 24 அன்று இப்படம் வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!