
இரண்டே நாளில் ரூ.116 கோடி வசூலித்த புஷ்பா
இப்படம் முதல் நாளில் 71 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நேற்றைய வசூலுடன் சேர்த்து இரண்டே நாளில் 116 கோடி வசூலித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்கள்.
"பாகுபலி 2" படம் தவிர்த்து ஆந்திரா, தெலங்கானாவில் ஒரு தெலுங்குப் படத்தின் இரண்டாவது நாள் வசூலில் "புஷ்பா" சாதனை படைத்துள்ளது. நேற்று மட்டும் இப்படம் அந்த இரண்டு மாநிலங்களிலும் சுமார் 14 கோடி வசூலித்துள்ளதாம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றைய வசூல் முதல் நாள் வசூல் அளவிற்கு இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். அடுத்த சில தினங்களில் இப்படம் 150 கோடி வசூலைக் கடந்தால் படம் லாபக் கணக்கில் சென்றுவிடும் என்கிறார்கள்.
ஆந்திராவில் இப்படத்தின் டிக்கெட்டுகள் அரசு நிர்ணயித்த விலைக்கு அதிகமாக விற்கப்படாத காரணத்தால் படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இல்லையென்றால் வசூல் தொகை இன்னும் அதிகமாகியிருக்கும்.
அல்லு அர்ஜுன் எதிர்பார்த்தபடியே இந்தப் படம் அவருக்கு தமிழிலும், ஹிந்தியிலும் புது வியாபாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!