
ஒன்பது வருடங்களுக்குப் பிறகு ஹிந்தி படத்தில் ராஷி கண்ணா
இதுகுறித்து ராசி கண்ணா வெளியிட்டுள்ள செய்தியில், யோதா அணியில் சேரப் போகிறேன் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் மற்றும் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் படப்பிடிப்புக்கு செல்ல தயாராக உள்ளோம். 2022 நவம்பர் 11ம் தேதியன்று திரையரங்குகளில் சந்திப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ராஷி கண்ணா 2009ம் ஆண்டு மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி படத்தில் தான் அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று நடிக்க தொடங்கிவிட்டவர். ஒன்பது வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் ஹிந்தி படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!