
முன்பதிவிலேயே 100 கோடி வசூல் : மரைக்கார் சாதனை
ஆனால் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கூட இந்தப்படத்தை தற்போதைய சூழலில் தியேட்டர்களில் வெளியிட்டால் படத்திற்காக போட்ட முதலீட்டை அப்படியே திரும்ப எடுக்க முடியுமா என்கிற சந்தேகம் ஏற்பட்டதால், தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு ஒடிடியில் ரிலீஸ் செய்ய தயாரானார்.
இந்த சமயத்தில் கேரள அரசு தலையிட்டு தியேட்டர் வெளியீட்டில் சில விஷயங்களில் உதவி செய்ய முன் வந்தது. அதை தொடர்ந்து மனதை மாற்றிக்கொண்ட தயாரிப்பாளர் மரைக்கார் படத்தை தியேட்டர்களில் வெளியிட மீண்டும் முன்வந்தார். அந்தவகையில் கேரளாவில் 625 தியேட்டர்கள் உட்பட உலகெங்கிலும் சேர்த்து 4100 திரையரங்குகளில் 16000 காட்சிகள் தினமும் திரையிடப்பட இருக்கின்றன.
இந்தநிலையில் படத்திற்கான முன்பதிவு சமீபத்தில் துவங்கப்பட்டது.. தற்போது வரை முன்பதிவிலேயே நூறு கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்கிற தகவல் தயாரிப்பாளர் தரப்பிலிருந்தே வெளியாகியுள்ளது. அந்தவிதமாக இந்திய சினிமா வரலாற்றிலேயே இப்படி முன்பதிவிலேயே அதிகம் வசூலித்த முதல் படம் இதுதான் என்கிற சாதனையையும் இந்தப்படம் செய்துள்ளது. .





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!