திருமணத்திற்கு தயாராகும் நடிகர் ஹரிஷ் கல்யாண்
ஜூன் 28, 2022
Advertisement
2010 ஆம் ஆண்டு வெளியான "சிந்து சமவெளி" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணின் மகன் ஆவார். பியார் பிரேமா காதல், இஸ்பேட்டா ராஜாவும் இதய ராணியும், தனுஷ் ராசி அன்பர்களே, தாராள பிரபு உள்ளிட்ட படங்கள் அவரை பிரபலமாக்கின. தற்போது இயக்குனர் சசி இயக்கத்தில் "நூறு கோடி வானவில்" என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். சித்தி இத்னானி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இயக்குனர் ஷண்முகம் இயக்கும் டீசல் படத்திலும் நடித்து வருகிறார் .
இந்நிலையில் ஹரிஷ் கல்யாணுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகக் தகவல் வெளியாகியுள்ளது . ஆகஸ்ட் கடைசி வாரத்திலோ அல்லது செப்டம்பர் மாத தொடக்கத்திலோ திருமணம் நடைபெறலாம் என கூறப்படுகிறது. இது பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணமாம்.

Tags
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!