
விஷ்ணுவர்தன் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது
மார் 20, 2023
Advertisement
நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா ஏற்கனவே சினிமாவில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரை தொடர்ந்து சமீபத்தில் திருமணம் ஆன முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளியும் தற்போது கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் ஆகாஷ் உடைய மாமனாருமான XB Films சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இந்த படம் பற்றிய அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது. அஜித்தின் பில்லா, ஆரம்பம் போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இந்த படத்தை இயக்குகிறார். இப்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை இ.வி.பி. பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!