தண்ணீர் வா வா என்று அழைத்தது - விக்ரம் குதூகலம்
டிச 06, 2022
Advertisement
கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களுக்கு பின் விக்ரம் தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். ரஞ்சித் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். விக்ரமுடன் மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். கோலார் தங்க வயல் குறித்த கதையில் இப்படம் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு ஒகேனக்கல் அருகே நடைபெற்று வருகிறது.
படக்குழுவினர் உடன் தண்ணீரில் குளித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ள விக்ரம், ‛‛இன்று ஒகேனக்கல் அருகில் தங்கலான் படப்பிடிப்பு கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது. பேக் அப் என்று கேட்டதும் ஒரே குதி தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா. என்ன?! ஐயோ வேண்டாம் என்று பதறிய சிலர். கடைசியில் தண்ணீரை விட்டு வர மறுத்ததுதான் மிச்சம்"" என்று மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!