
யஷின் டாக்சிக் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு எப்போது?
நடிகர் யஷின் மிகவும் எதிர்பார்க்கப்படும் கேங்ஸ்டர் படமான "டாக்சிக்" குறித்த எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுடாரியா, அக்ஷய் ஓபராய், சுதேவ் நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 26ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டிக்கெட் முன்பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. டாக்சிக் படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு ஆகஸ்ட் 21ம் தேதி பல்வேறு மொழிகளிலும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியிடுகிறார்கள். இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் படக்குழுவினர் விளம்பரப் பணிகளில் தீவிரமடைந்துள்ளனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!