
ஆகஸ்ட் 21ல் ஓடிடியில் ஜனநாயகன்
தமிழக முதல்வர் விஜய்யின் கடைசி படமாக "ஜனநாயகன்" படம் கடந்த ஜூலை மாதம் 23ம் தேதி வெளியானது. படம் பற்றிய வசூல் விவரங்களை தயாரிப்பு நிறுவனம் இதுவரையில் வெளியிடவில்லை. இருப்பினும் 300 கோடி வசூலைக் கடந்ததாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இப்படம் ஆகஸ்ட் 21ம் தேதி தங்களது ஓடிடி தளத்தில் வெளியாகிறது என ஜீ5 அறிவித்து அதற்கான முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய படம். தணிக்கை சான்றிதழ் சிக்கல் காரணமாக வெளியாகவில்லை. அதன்பின் நீதிமன்ற வழக்கு, வாபஸ் என கடந்து, கடந்த மாதம் தான் வெளியானது. இடையில் இப்படத்தின் திருட்டு காப்பி இணையங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தியேட்டர் வசூலில் எதிர்பார்த்த வரவேற்பு, வசூல் கிடைக்கவில்லை. ஓடிடியில் வெளியான பின்பு வரவேற்பைப் பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!