
வேழம் டிரைலர் வெளியானது!
ஜூன் 09, 2022
Advertisement
வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடித்த மன்மதலீலை படத்தைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடித்துள்ள புதிய படம் வேழம். சந்தீப் ஷியாம் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஜனனி அய்யர், ஐஸ்வர்யா மேனன், சங்கிலி முருகன், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்து உள்ளார்கள். ஆக்ஷன் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த வேழம் படத்தின் டிரைலரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். யுஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ள இந்த வேழம் படம் ஜூன் 24-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!