
ஓடிடியில் வெற்றிமாறனின் ஜல்லிக்கட்டு வலைத்தொடர்
செப் 29, 2022
Advertisement
தெலுங்கு படங்களை ஒளிபரப்பு செய்து வந்த ஆஹா ஓடிடி தளம் தற்போது தமிழிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஓடிடி தளத்தில் ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்ட பேட்டை காளி என்ற புதிய வலை தொடர் வெளியாக உள்ளது. இது குறித்த மோஷன் போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி இருக்கிறது. தமிழர்களின் முக்கிய பாரம்பரியமான ஜல்லிக்கட்டு தொடர்பான முதல் தமிழ் இணைய நிகழ்ச்சி இது. மேலும் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இந்த நிகழ்ச்சியை தயாரிக்க, எல். ராஜ்குமார் இயக்குகிறார். இந்த தொடர் தீபாவளி முதல் ஆஹா ஓடிடியில் ஒளிபரப்பாக உள்ளது. அதோடு தமிழில் வெளியாகும் இந்த பேட்டைகாளி என்ற ஜல்லிக்கட்டு தொடரை வேறு மொழிகளில் டப் செய்து வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள் .
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!