
அம்மாவை படிக்க வைத்த வெற்றி மாறன்
இதுகுறித்து மேகலா சித்ரவேல் கூறியதாவது: என்னைப் படிக்க வைத்ததே வெற்றிமாறன்தான். எனக்கு சிறுவயதிலிருந்தே நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகம். பெண்கள் நிறைய முன்னேற வேண்டும். வயதெல்லாம் ஒரு காரணமாக காட்ட வேண்டியதில்லை. வயதைக் காரணம் காட்டி அவர்களை அடக்கக் கூடாது.
எனது கைடு பேராசியர் பிரபாகர். ஒரு ஆய்வு கட்டுரை எழுதுங்கள் அதற்கு நிறைய படியுங்கள் என்றார். நான் எம்ஜிஆர் குறித்து நிறைய எழுதியிருக்கிறேன். அவர் சொன்னதை என் பையனிடம் சொன்னேன். அவன் உடனே "கண்டிப்பாக நீங்க இத பண்ணுங்கம்மா" என்றான். அவன்தான் 4 வருட கட்டணத்தை கட்டி என்னை படிக்க வைத்தான். என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!