
அடுத்தடுத்த அப்டேட்களால் பரபரப்பாகும் தமிழ் சினிமா
அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள "மாவீரன்" படத்தின் டிரைலர் நேற்று நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் வெளியிடப்பட்டது. இந்த டிரைலரிலும் சாதி அரசியல் வசனங்கள் இடம் பெற்றுள்ளதால், "மாமன்னன்" படத்திற்குப் பிறகு இந்தப் படமும் சர்ச்சையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
"லியோ, மாமன்னன், மாவீரன்" என சில படங்கள் தமிழ் சினிமா உலகிலும், அரசியல் தளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரஜினிகாந்த்தின் "ஜெயிலர்" படத்திற்கு எந்த அப்டேட்டும் வரவில்லையே என அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் கேட்டனர். அதைத் தீர்க்கும் வகையில் "ஜெயிலர்" படத்தின் முதல் சிங்கிள் பற்றிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் ஆகியோரது படங்களின் அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டிருக்க "அப்டேட், அப்டேட், வலிமை அப்டேட்" என அதை மிகவும் பிரபலமாக்கிய அஜித் ரசிகர்கள் "விடாமுயற்சி" படத்தின் படப்பிடிப்புப் பற்றிய அப்டேட் எப்போது வரும் என காத்திருக்கின்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!