
ஒரு வழியாக திரைக்கு வரும் வைபவ் படம்
நவ 04, 2023
Advertisement
கடந்த 2020ம் ஆண்டில் புதுமுக இயக்குனர் பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ் நடித்த திரைப்படம் "ஆலம்பனா". இதில் பார்வதி நாயர், முனீஷ்காந்த், காளி வெங்கட், கபீர் துபான் சிங், தீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள இப்படத்தை கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். அலாவுதீன் பூதம் போன்று பேண்டஸி கதைகளத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. படப்பிடிப்பு எப்போதோ முடிந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு சில காரணங்களால் இப்படம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் மூன்று வருடங்கள் கழித்து இத்திரைப்படம் இந்த வருடம் டிசம்பர் 15ம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…