
அஜித்துடன் மீண்டும் இணையும் இரு நாயகிகள்
சமீபகாலமாக விடாமுயற்சி படக்குழுவினர் துபாய் பகுதிகளை சுற்றி படப்பிடிப்பிற்கான லோகெஷன் தேடும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 29ம் தேதியில் துபாயில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அஜித் அரபு நாடுகளில் தான் பைக் சுற்று பயணத்தில் உள்ளார். அதை முடித்ததும் அப்படியே படப்பிடிப்பில் கலந்து கொள்கிறாராம்.
இதனிடையே இதில் நாயகியாக நடிகை த்ரிஷா நடிப்பதாக ஏற்கனவே தகவல் வந்தது. இப்போது இன்னொரு நாயகியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு அஜித் உடன் இணைந்து வலிமை படத்தில் இவர் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!