
வலிமை : அஜித், விஜய் ரசிகர்கள் மோதல் ஆரம்பம்
நேற்று அஜித் நடித்த "வலிமை" படம் உலகம் முழுவதும் வெளியானது. அஜித் ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி மகிழ, விஜய் ரசிகர்களோ படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பி வந்தனர். நேற்று வலைதளத்தில் "ValimaiDisaster" என்று படத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் விஜய் ரசிகர்கள் டிரெண்டிங் வர வைத்தனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று "ValimaBlockbuster. Ajithkumar" ஆகியவற்றை டிரென்டிங்கில் வரவைத்தனர் அஜித் ரசிகர்கள். மேலும், விஜய் ரசிகர்களின் எதிர்ப்புகளை சமாளிக்க படத்தில் எதிரிகளைப் பற்றி அஜித் பேசும் வசனமான, “நம்மள பிடிக்காதவங்க கல்லு எறிஞ்சிட்டு தான் இருப்பாங்க, அதுக்கெல்லாம் நாம பதில் சொல்லிட்டு இருக்க கூடாது. எறியுற கல்ல கேட்ச் பிடிச்சி கோட்டைய கட்டி அது மேல கால் மேல கால் போட்டுட்டு உட்காரனும்…”, “எனக்கு எதிரியா இருக்கிறது அவ்வளவு சுலபம் அல்ல..."" உள்ளிட்ட சில வசனங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!