
மீண்டும் நாக சைதன்யாவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி
செப் 20, 2023
Advertisement
கார்த்திகேயா பட இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா தனது 23வது படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் மீனவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மீனவர்கள் பற்றிய கதையாக இந்த படம் உருவாகிறது. கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ், அனுபமா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியானது. இப்போது சாய் பல்லவி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான போட்டோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதற்கு முன்பு நாக சைதன்யா, சாய் பல்லவி ஆகியோர் லவ் ஸ்டோரி எனும் படத்தில் இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!