
அருள்வான் உண்மை கதை
படம் பற்றி இயக்குனர் கூறியிருப்பதாவது: இது ஒரு உண்மை சம்பத்தை அடிப்படையாக கொண்ட படம். மலைவாழ் மக்கள் அடிப்படை வசதிக்கே போராடிக் கொண்டிருக்கும்போது கல்வி எப்படி அவர்களுக்கு சாத்தியப்படும். என்றாலும் அந்த மக்களோடு பிறந்த ஒரு சிறுமி கல்விக்காக போராடுகிறாள். எப்படியோ அவள் மாவட்ட ஆட்சித்தலைவர் அருள்நிதியை சந்தித்து தனது விருப்பத்தை தெரிவிக்கிறாள். அதன்பிறகு கலெக்டர் அருள்நிதி அந்த பெண்ணுக்கு என்னவெல்லாம் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
சிறுமியின் தந்தையாக ஆரவும், தாயாக ரம்யா பாண்டியனும் நடித்திருக்கிறார்கள். ஆரவ் இதுவரை பார்த்திராத ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். அவர்தான் இரண்டாம் நாயகன், ரம்யா பாண்டியன் மலைவாழ் பெண்ணாகவே மாறி நடித்திருக்கிறார். "கல்விதான் எல்லாவற்றுக்குமான விடுதலை" என்பதை அழுத்தமாக சொல்லும் படம் என்றார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!