குட் பேட் அக்லி பட முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு
ஜூன் 08, 2024
Advertisement
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் "குட் பேட் அக்லி" என்கிற படத்தில் நடித்து வருகின்றார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த வாரத்தில் ஐதராபாத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த முதற்கட்ட படப்பிடிப்பில் சண்டை காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியுள்ளனர்.
இந்நிலையில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜப்பானில் நடத்த முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர். இந்த இடைப்பட்ட இடைவெளியில் தான் ஏற்கனவே மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வந்த விடாமுயற்சி படத்தில் கலந்து கொள்ள உள்ளார் அஜித்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…