இரண்டு மொழிகளில் ஹிட் அடித்த யுவன்ஷங்கர் ராஜா
ஜூன் 08, 2024
Advertisement
தமிழ் சினிமா உலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் ஷங்கர் ராஜா. அவர் இசையமைத்த தமிழ்ப் படமான "கருடன்", தெலுங்குப் படமான "கேங்ஸ் ஆப் கோதாவரி" ஆகிய படங்கள் மே 31ம் தேதி ஒரே நாளில் வெளியாகின.
இரண்டு படங்களுமே ஆக்ஷன் படங்கள். இரண்டு படங்களிலும் யுவனின் இசைக்கான முக்கியத்துவம் அதிகம் இருந்தது. இரண்டு படங்களையும் தனது இசையால் இன்னும் அதிகமாக ரசிக்க வைத்தார் யுவன். இரண்டு படங்களுமே வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
சூரி கதையின் நாயகனாக நடித்த "கருடன்" 25 கோடியைக் கடந்தும், விஷ்வன் சென் நடித்த தெலுங்குப் படமான "கேங்ஸ் ஆப் கோதாவரி" படம் 20 கோடியைக் கடந்தும் வசூலித்துள்ளது. இப்படங்களுக்கான விமர்சனங்களிலும் யுவனின் இசையைப் பற்றி பலரும் பாராட்டியுள்ளார்கள்.
யுவனின் அடுத்த பெரிய வெளியீடாக விஜய் நடிக்கும் "தி கோட்" படம் வெளிவர உள்ளது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!