மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி
ஜூன் 05, 2026
Advertisement
மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்தவர் ஈடன் குரியகோஸ். "மிஸ் கேரளா" பட்டம் வென்ற கையோடு "ஆண்டவ பெருமாள்" என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். "இருக்கு ஆனா இல்ல", "பனி விழும் நிலவு", "ஏன்டா தலையில் எண்ண வைக்கல" படங்களில் நடித்தார். பின்னர் மலையாளத்திற்கு சென்றார். அங்கு "காட்டுமாக்கன்" படத்தில் நடித்தவர், துளசிதாஸ் இயக்கிய "கேர்ள்ஸ்" படத்தில் நடித்தார். "மாயத்திரை", "குருதிக்காலம்" என்ற வெப் தொடர்களில் நடித்தார்.
தமிழ், மலையாளம் மொழிகளைத் தொடர்ந்து தெலுங்கில் "ஸ்ரீரஸ்து சுபமஸ்து" படத்தில் நடித்துள்ளார். கடைசியாக "துரிதம்" என்ற தமிழ் படத்தில் நடித்தார். தற்போது 2 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது “சற்றே இடைவெளிக்குப்பின் மறுபிரவேசம் போல இப்போது தமிழில் இரண்டு புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். மேலும் மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன்.
இதன் மூலம் எனது புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளேன். தயாரிப்பு தரப்பில் இருந்து முறையான அறிவிப்புகள் வெளிவரும். நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிப்பதற்கு பெரிதும் விருப்பமாக இருக்கிறேன். திரைப்படங்களைப் பார்த்து தினந்தோறும் கற்றுக் கொண்டே இருக்கிறேன்” என்கிறார்.

சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!